இலங்கை மியான்மார் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
ஜனவரி 28, 2025இலங்கையில் உள்ள மியான்மார் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின், கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 28) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, இருவரும் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து இலங்கைக்கும் மியான்மருக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வலிகள் தொடர்பிலும் சுமுகமான கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலியுறுத்திய பிரிகேடியர் ஜெனரல் எல்வின், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வை நினைவுகூறுமுகமாக இருவரும் நினைவு சின்னங்களை பரிமாறிக் கொண்டனர். இதன்போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் கலந்து கொண்டார்.