தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

ஜனவரி 28, 2025

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க (ஓய்வு), இன்று (ஜனவரி 28) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, இராணுவ வீரர்களின் திறன் மேம்பாட்டிற்கு மூலோபாய கல்வியின் பங்கு தொடர்பான பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களை தொடர்பில் கலந்துரையாடினர்.

ஆயுதப்படைகள் மற்றும் நேச நாடுகளின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளிடையே தலைமைத்துவம் மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பது தொடர்பில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான ஒரு முதன்மை நிறுவனமாக NDC இன் முக்கியத்துவத்தை இக்கலந்துரையாடல் எடுத்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.