அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
ஜனவரி 29, 2025அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் அன்டணி சி. நெல்சன் (அமெரிக்க இராணுவம்) உட்பட அமெரிக்க தூதரகத்தின் சில அதிகாரிகள் இன்று காலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த அமெரிக்க அரசாங்கம் அளித்துள்ள ஆதரவை பிரதி அமைச்சர் பாராட்டினார். மேலும், இரு நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதலின் வலுவான மற்றும் நீடித்த உறவில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.