புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
ஜனவரி 30, 2025புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, இன்று (ஜனவரி 30) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, பாதுகாப்புச் செயலாளர், எயார் மார்ஷல் எதிரிசிங்கவின் புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, இலங்கை விமானப்படையை மேலும் வலுப்படுத்துவதற்கான அவரது தலைமைத்துவத்தில் நம்பிக்கை தெரிவித்தார். தேசியப் பாதுகாப்பில் விமானப்படையின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய தேசியப் பாதுகாப்பு விஷயங்கள், செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் மூலோபாய முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
விமானப்படைக்குள் உயர்ந்த தொழில்முறை தரத்தை நிலைநிறுத்துவதற்கும், தேசியப் பாதுகாப்பு மற்றும் அனர்த்த மீட்சி நடவடிக்கைகளுக்கும் விமானப்படையின் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதி செய்வதற்கும் தனது உறுதிப்பாட்டை எயார் மார்ஷல் எதிரிசிங்க மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வை குறிக்கும் முகமாக நினைவுப் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.