‘அமான் - 2025’ பல்முக பயிற்சியில் பங்கேற்பதற்காக விஜயபாகு கப்பல் இலங்கையை விட்டு வெளியேறியது
ஜனவரி 31, 2025பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட AMAN-2025 பல்முக பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படையின் பிரதிநிதியாக, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு இன்று (2025 ஜனவரி 30) கொழும்பு துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு இன்று புறப்பட்டது. கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு புறப்பட்டது.
2007 ஆம் ஆண்டில், பிராந்திய ஒத்துழைப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் இயங்குதன்மை ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் கடல் பயங்கரவாதம் மற்றும் கடற்கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு கூட்டாக பதிலளிப்பதன் நோக்கத்துடன் பாகிஸ்தான் கடற்படை பல பங்குதாரர் பயிற்சியான 'அமன்' தொடங்கப்பட்டது. அதன்படி, 2025 பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெறவுள்ள ஒன்பதாவது (AMAN - 2025) பலதரப்புப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபாகு இன்று (2025ஜனவரி 30) நாட்டிலிருந்து புறப்பட்டது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவான இராஜதந்திர உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், பயிற்சி நடவடிக்கைகள், நிபுணத்துவ தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதற்கு கடற்படைக்கு பெரும் ஆதரவு கிடைக்கும்.
மேலும், பல பிராந்திய மற்றும் பிராந்திய சாராத கடற்படைகள் மற்றும் கடல்சார் தரப்பினரை உள்ளடக்கிய பலதரப்பு பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம், இலங்கை கடற்படையானது பிராந்திய கடற்படைகளுடன் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள முடியும், கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான புதிய அறிவு, திறன் உத்திகள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள முடியும் புதிய சவால்களை ஏற்றுக்கொள்வது, அடையாளம் காண்பது மற்றும் கூட்டாக தீர்வுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு பதிலளிப்பது என பல நன்மைகள் கிடைக்கும்.
நன்றி - www.navy.lk