பாகிஸ்தான் கடற்படை கப்பல் PNS ASLAT கொழும்பு வருகை

பெப்ரவரி 01, 2025

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) ASLAT உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு இன்று காலை (பிப்ரவரி 01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகைதந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேட்பளிக்கப்பட்டதாக கடற்படை ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

243 பேரைக் கொண்ட கடற்படை குழுவினால் இயக்கப்படும், PNS ASLAT, 123 மீட்டர் நீளமுள்ள ஒரு Frigate வகை போர்க்கப்பல் ஆகும்.

விஜயத்தை நிறைவுசெய்து பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேற முன் கப்பலின் குழுவினர் நாட்டிலுள்ள சில பிரதான சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.