புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார்

பெப்ரவரி 03, 2025

சனிக்கிழமை (பெப்ரவரி 1) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஜெனரல் ஜெரி ஹெக்டர் டி சில்வா (ஓய்வு) எழுதிய 'லவ் அண்ட் லூர் ஆஃப் தி வைல்ட்ஸ்' (Love and Lure of the Wilds) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

புகழ்பெற்ற அறிஞரும் எழுத்தாளரமான ஜெனரல் டி சில்வா (ஓய்வு) 'War Heroes Killed-in-Action'எனும் அவரது முன்னைய இலக்கிய படைப்புக்காகவும் அறியப்படுகிறார். இலங்கை இராணுவத்தின் 13வது இராணுவ தளபதியாக பணியாற்றிய ஜெனரல் டி சில்வா (ஓய்வு) பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராகவும் சேவையாற்றியுள்ளார். அத்துடன் 2020 ஆம் ஆண்டில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 5வது வேந்தராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.