தென் கடற்பரப்பில் போதைப் பொருட்ளுடன் 04 சந்தேக நபர்ககள் கடற்படையினரால் கைது

ஜனவரி 01, 2021

தொடந்துவ கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 05 கிலோ மற்றும் 945 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 02 கிலோ மற்றும் 47 கிராம் ஹெரோயின் மற்றும் 03 கிராம் கேரளா கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்களை கைது செய்ததாக  கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது  போதைப் பொருட்களை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட பலநாள் மீன்பிடிப்படகுகளும் கைப்பற்றப்பட்டன.

இலங்கை கடற்படை, போதைப் பொருள் கடத்தல் மற்றும் கடல் மார்க்கமாக நடைபெறும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 22 வயது முதல் 29 வயதுடைய மாத்தறை, பொத்துவில், நீர்கொழும்பு மற்றும் மஸ்கெலிய பிரதேசங்களை சேர்ந்த வர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்கள் மற்றும் பல நாள் மீன்பிடிப்படகுடன் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள்,  மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஹிக்கடுவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் சுகாதார  மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.