பாதுகாப்பு பிரதி அமைச்சர் இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியாவிற்கு விஜயம் செய்தார்

பெப்ரவரி 07, 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று மாலை (பெப்ரவரி 07) இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியாவை பார்வையிட விஜயம் செய்தார். இக்கப்பல் புதன்கிழமை (பெப்ரவரி 05) இலங்கையை வந்தடைந்தது.

சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்கவும் இவ் விஜயத்தில் இணைந்துக் கொண்டார். கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் ஆல்பர்டோ பார்டெலோமியோ, கப்பலுக்கு வந்த அநிதிகளை வரவேற்றார். இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் அதிமேதகு டேமியானோ பிராங்கோவிக்கும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இராஜதந்திரிகள் உடபட பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகளும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துக் கொண்டனர்.