ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி
தூதுக்குழு பாதுகாப்பு அமைச்சசுக்கு விஜயம்

பெப்ரவரி 11, 2025

ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) கல்வித் துறைத் தலைவர் கேர்னல் லௌசேன் செங்கிமானா இங்காபைரே தலைமையிலான தூதுக்குழு இன்று (பெப்ரவரி 11) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஜயம் செய்தது.

பாதுகாப்பு அமைச்சின் பதில் பாதுகாப்பு செயலாளர் திருமதி இந்திகா விஜேகுணவர்தன தலைமையிலான சிரேஷ்ட அமைச்சு அதிகாரிகளுடன் இத்தூதுக்குழுவினர் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, அறிவு பரிமாற்றம் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ருவாண்டா தூதுக்குழு பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியுடன் அமைச்சின் கேட்போர்கூடத்தில் ஒரு தொடர்பாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றது. இதன் போது கொழும்பில் உள்ள ருவாண்டா கௌரவ தூதரகத்தின் பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயத்தை குறிக்கும் வண்ணம் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.