ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) தூதுக்குழு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்திற்கு விஜயம்

பெப்ரவரி 12, 2025

ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) கல்வித் துறைத் தலைவர் கேர்ணல் லௌசேன் செங்கிமானா இங்காபைரே தலைமையிலான தூதுக்குழு செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 11) பத்தரமுல்லையில் உள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்திற்கு (INSS) விஜயம் செய்தது.

மேற்படி கற்கைகள் நிறுவனத்தின் மேற்பார்வை பணிப்பாளர் நாயகம் மற்றும் பதில் பணிப்பாளர் (ஆராய்ச்சி) கேர்ணல் நளின் ஹேரத், வருகை தந்த தூதுக்குழுவை வரவேற்று, (INSS) நிறுவனம் பற்றிய குறிப்பாக அதன் நிறுவன அமைப்பு, தேசிய பாதுகாப்பை எதிர்கொள்வதில் அதன் அர்ப்பணிப்பு, எதிர்கொள்ளும் சமகால சவால்கள், தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் எதிர்காலத்திற்கான மூலோபாய திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விளக்கமொன்றை வழங்கினார்.

இதன் போது கேர்ணல் இங்கபைர் தத்தமது நாடுகளின் பாதுகாப்புத் துறையில் இரு நிறுவனங்களுக்கிடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்தி தொடர்ச்சியாக ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான தனது நோக்கத்தை தெரிவித்தார்.

இந்த விஜயத்தை குறிக்கும் முகமாக, இரு நிறுவனங்களுக்கிடையிலான கூட்டுறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.