நிலை 2 இலங்கை இராணுவ வைத்திய படையின் 11வது குழுவினரின் தென்
சூடான் ஐநா அமைதி காக்கும் பணி ஆரம்பம்
பெப்ரவரி 14, 2025
தென் சூடான் ஐ.நா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையின் 11வது இலங்கை இராணுவ வைத்திய குழுவினர் வியாழக்கிழமை (13) தனது பணியைத் தொடங்கினர்.
இந்தக் குழுவில் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் லெப்டினன் கேணல் ஆர்.எம்.டி.பி. ராஜபக்ஷ யூஎஸ்பீ தலைமையில், லெப்டினன் கேணல் கே.டி.பீ.டி.இ.ஏ. விஜேசிங்க இரண்டாவது கட்டளை அதிகாரியாகவும், 16 இராணுவ அதிகாரிகள், 2 கடற்படை அதிகாரிகள் மற்றும் 46 சிப்பாய்கள் உட்பட 64 இராணுவ வீரர்கள் உள்ளனர். சர்வதேச அமைதி காக்கும் மற்றும் மனிதாபிமான உதவிக்கான இலங்கையின் உறுதிப்பாடுடன் அவர்களின் பணி தொடர்கிறது.
அவர்கள் புறப்படுவதற்கு முன்பு, வெள்ளிக்கிழமை (31 ஜனவரி 2025) அன்று, வேரஹெர இராணுவ வைத்திய படையணி தலைமையக மைதானத்தில், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு, சம்பிரதாய மரியாதை அணிவகுப்பை வழங்கி படையினர் தங்கள் அமைதி காக்கும் பணிகளை முறையாக ஏற்றுக்கொண்டனர்.
இராணுவ வைத்திய படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் இராணுவ வைத்திய படையணியின் நிலைய தளபதி உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். குடும்ப உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விமான நிலையத்தில் குழுவினரை வழியனுப்பிவைக்க கலந்து கொண்டு, அவர்களின் பணிக்கு தங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கினர்.
இராணுவ வைத்திய படையணியின் தொடர்ச்சியான பங்கேற்பு, உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது. தென் சூடானில் உள்ள ஐநா பணியாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு வைத்திய சேவையை வழங்குவதில் நிலை-2 இலங்கை இராணுவ வைத்திய படையின் மருத்துவமனை முக்கிய பங்கு வகிக்கிறது, இது பணியின் மனிதாபிமானத்தை மேலும் வலுப்படுத்துவதாகும்.
நன்றி - www.army.lk