தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பாதுகாப்புச் செயலாளரைச் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்

பெப்ரவரி 14, 2025

தேசிய மாணவர் படையணியின் வெளிச்செல்லும் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த பொன்சேக்கா இன்று (பிப்ரவரி 14) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

இச்சந்திப்பில், மேஜர் ஜெனரல் பொன்சேக்காவின் அர்ப்பணிப்புமிக்க சேவை மற்றும் முன்மாதிரியான தலைமைத்துவத்தைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், இலங்கை இராணுவம் மற்றும் தேசிய மாணவர் படையணிக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டினார்.

தேசிய மாணவர் படையணியை உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும், பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தேசிய பெருமையை மேம்படுத்துவதற்கும் மேஜர் ஜெனரல் பொன்சேக்கா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் தனது பாராட்டுக்களை தெரிவித்ததுடன், அவருக்கு மகிழ்ச்சியான எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இச்சந்திப்பின் நிறைவில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.