இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா
பெப்ரவரி 18, 2025இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 80 ஆம் ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 16) ஆம் தேதி பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் தெல்கொட Tamarind Banquet மண்டபத்தில் நடைபெற்றது. விழா விற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் லெப்டினன்ட் கேர்ணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) வரவேற்றார்.
1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம், 48 துணை ஆயுதப்படை சங்கங்களுடன் 45,000 க்கும் மேற்பட்ட முப்படை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சங்கமாகும். இந்த சங்கத்தின் 80 வது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், தனதுரையில் போது நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து போர்வீரர்களையும் கௌரவத்துடன் நினைவு கூர்ந்தார்.
மேலும், நாட்டிற்காகப் போராடிய, காயமடைந்த மற்றும் பல்வேறு குறைபாடுகளுக்கு ஆளான ஓய்வுபெற்ற போர்வீரர்கள் மற்றும் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனைக்காக்க ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் உறுதிபூண்டுள்ளதாகக் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பாதுகாப்பு அமைச்சினால் முன்னாள் போர்வீரர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு நிறுவப்பட்ட சிரேஷ்ட குழுவின் செயல்முறை குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது.
முன்னாள் படைவீரர் சங்கத்தின் பொதுக்குழுவை பத்து ஆண்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐந்து ஆண்டுகள் துணைக்குழுக்கள் அல்லது நிர்வாகக் குழுக்களில் பணியாற்றிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் "வாழ்நாள் உறுப்பினர் பதக்கம" மற்றும் முன்னாள் படைவீரர் சங்கத்திற்கு வாழ்நாள் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு, அர்ப்பணிப்புடன் தங்கள் சேவையை வழங்கிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் "கௌரவான்வித்த சேவா பதக்கம" ஆகிய பதக்கங்களை பிரதி அமைச்சர் உறுப்பினர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, முன்னாள் படைவீரர் சங்கத்தின் செயலாளர் கேர்ணல் சுஜித் ஜயசேகர (ஓய்வு) மற்றும் முன்னாள் படைவீரர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.