இந்தோனேசிய கடற்படைக் கப்பல் KRI BUNG TOMO - 357 இலங்கை விஜயம்
பெப்ரவரி 17, 2025நல்லெண்னண விஜயமொன்றை மேட்கொண்டு இந்தோனேசிய கடற்படைக் கப்பல் KRI BUNG TOMO - 357 நேற்று (பெப்ரவரி 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினால் வரேவேட்பளிக்கப்பட்டது என கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
95 மீட்டர் நீளமுள்ள இந்த Frigate வகை கப்பலில் 111 பணியாளர்களை கொண்ட குழுவினால் இயக்கப்படுகின்றது. கெப்டன் டெடி குணவன் வித்யாத்மோகோ இதன் கட்டளை தளபதியாக பணியாற்றுகிறார்.
கப்பலின் குழவினார் இன்று மாலை (பிப்ரவரி 17) நாட்டிலிருந்து வெளியேற முன் பல சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவார்கள்.