நீலகிரி ஸ்தூபியின் புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை பிரதிஷ்டை
செய்யும் வைபவம் குறித்து விசேட கலந்துரையாடல் நடைப்பெற்றது

பெப்ரவரி 18, 2025

நீலகிரி ஸ்தூபியின் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், மார்ச் 04, (2025) ஸ்துபியில் புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களைப் பிரதிஷ்டை செய்யும் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கான ஆயத்த பணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில் இன்று (பிப்ரவரி 18) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூதயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் முதன்மையாக நினைவுச்சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை பிரதிஷ்டை செய்யும் வைபவம் மற்றும் புனரமைப்பு பணிகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் மீதமுள்ள பணிகளை முறையாக முடிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நீலகிரி ஸ்தூபி கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய பௌத்த ஸ்தூபியாகக் கருதப்படுகிறது, மேலும் இந்த மதத் தளம் இப்பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்தூபியை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, கடந்த ஆண்டு மீண்டும் புனரமைப்பு பணிகல் ஆரம்பிக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் நா உயன விகாரையின் பிரதமகுரு வணக்கத்துக்குரிய அங்குல்கமுவ அரியநந்த தேரர், நா உயன விகாரையின் இணைப்பாளர், கலாநிதி நாலக்க லங்காசேன, இலங்கை விமானப்படையின் பிரதிப் பணியாளர் பிரதானி எயார் வைஸ் மார்ஷல் சமிந்த விக்கிரமரத்ன, சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.