அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு நிலையான தீர்வுகள் அவசியம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர்
பெப்ரவரி 27, 2025
தலவத்துகொட கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் இன்று பெப்ரவரி 25 நடைபெற்ற NBRO வின் 14வது வருடாந்த ஆராய்ச்சி கருத்தரங்கு 2025 ன் பிரதம அதிதியாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கலந்து சிறப்பித்தார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், அனர்த்தங்கள் தொடர்பான சவால்களை திறம்படச் சமாளிக்க டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் புது வழிகளை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கௌரவ அதிதியாக கலந்துகொண்டார். இம்முறை இக்கருத்தரங்கு, "கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலைத் தக்கவைப்பதற்கான ஸ்மார்ட் தீர்வுகள்" என்ற தலைப்பின் கீழ் நடத்தப்படுகிறது.
NBRO இன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன, அவர்களின் வரவேற்பு உரையுடன் இக்கருத்தரங்கு ஆரம்பமானது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) இலங்கை அலுவலகத்தின் தலைமைப் பிரதிநிதி திரு. யமடா டெட்சுயா ஆரம்ப நிகழ்வில் உரையாற்றினார்.
கருப்பொருளுடன் இணைந்த கருத்தரங்கின் சிறப்பு நிகழ்ச்சிகள் பாதுகாப்பான மற்றும் நிலையான கட்டமைக்கப்பட்ட சூழலை வளர்ப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுவுறுத்துவதாக அமைந்தது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திறைசேரியின் பிரதிச் செயலாளர் திரு. அஜித் அபேசேகர "கட்டமைக்கப்பட்ட-சுற்றுச்சூழல் பின்னடைவு மற்றும் பொருளாதார செழிப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
NBRO இன் வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு அதன் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகளை வெளிப்படுத்த தளமமைத்து க்கொடுப்பதுடன் துறை சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளவும் உதவியாக அமையும். இந்நிகழ்வின் போது, கடந்த ஆண்டு ஆராய்ச்சித் செயல் திட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர் வ்ன்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருத்தரங்கில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் துறைத் தலைவர் பேராசிரியர் உதேனி நவகமுவ அவர்கள் தலைமையில் "கட்டமைக்கப்பட்ட சூழலை மீள்தன்மைக்கான ஸ்மார்ட் தீர்வுகள்" என்ற தலைப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அத்துடன், மூன்று தொழில்நுட்ப அமர்வுகளும் நடப்பட்டது.
இந்த நிகழ்வில் பொது மற்றும் தனியார் துறை நிறுவன முகவர்கள், கல்வியாளர்கள், மற்றும் தொடர்புடைய துறைகளில் நிபுணர்கள் உட்பட சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.