South Asia Masters Athletics Championship போட்டிகளில் சாதனை படைத்த சிவில்
பாதுகாப்பு திணைக்கள வீரர்கள் கௌரவிப்பு
பெப்ரவரி 28, 2025
ஜனவரி 10 முதல் 12 வரை இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற South Asia Masters Athletics Championship போட்டியில் சிறந்து விளங்கிய அதன் உறுப்பினர்களைப் பாராட்டுவதற்காக சிவில் பாதுகாப்புத் திணைக்களம் (CSD) சமீபத்தில் (பிப்ரவரி 18) பாராட்டு விழா ஒன்றை ஏட்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு CSDன் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் K H P பாலித்த பெர்னாண்டோ (ஓய்வு) தலைமை தாங்கினார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, CSD தடகள வீரர்கள் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் 13 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.
அவர்களின் சாதனைகளைப் பாராட்டி, பணிப்பாளர் நாயகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அத்துடன் விளையாட்டு வீரர்களுக்கு நிதி வெகுமதிகள் வழங்கப்பட்டன, மேலும் அவர்களின் எதிர்கால விளையாட்டு முயற்சிகளில் சிறந்து விளங்க தொடர்ந்து பாடுபட ஊக்குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், துணை இயக்குநர்கள், C S Dன் மாவட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.