டாக்காவில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் காலநிலை பாதுகாப்பு
குறித்து கர்னல் நலின் ஹேரத் உரையாற்றினார்

பெப்ரவரி 28, 2025

தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் (INSS) பதில் பணிப்பாளர் நாயகம் மற்றும் இயக்குநர் (ஆராய்ச்சி), மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக இயக்குநரும் பேச்சளருமான கேர்னல் நலின் ஹேரத், அண்மையில் பங்களாதேஷ் டாக்கா நகரில் நடந்த பிராந்திய மாநாடொன்றில் "Droughts, Floods and Fault Lines: Climate Security in South Asia" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். டாக்காவில் உள்ள Renaissance ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன், பிப்ரவரி 24-25 திகதிகளில் பங்களாதேஷ் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் (BIPSS) நிருவனத்தினால் ஏட்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்மாநாட்டில், காலநிலை மாற்றம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து உயர் மட்ட கலந்துரையாடல்களுக்காக, நேபாளம், பூட்டான், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆறு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் கலந்துக்கொண்டனர்.

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) ஆதரவுடன் இம் மாநாட்டில் கலந்து கொண்ட கேர்னல் ஹேரத், "Powering Peace: Renewable Energy for Climate Security in South Asia" என்ற தலைப்பில் உரையாற்றினார். காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான நிதி தொடர்பான அம்சங்களை அவர் வலியுறுத்தினார். கலப்பு நிதி மாதிரிகள், செயல்திறனுக்கான ஊதியம் (P4P) வழிமுறைகள், காலநிலை பத்திரங்கள், பசுமை பத்திரங்கள், பொது-தனியார் கூட்டாண்மைகள் மற்றும் ஒரு சேவையாக எரிசக்தி (EaaS) மாதிரி குறித்து அவர் விரிவாகக் விளக்கினார். மேலும், எல்லை தாண்டிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வலையமைப்புகளின் சாத்தியக்கூறுகள் மற்றும் பிராந்திய எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்த தெற்காசிய மின்சக்திக் குழுவை (SAPP) நிறுவுதல் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.

 நிதி மற்றும் பொருளாதார தடைகள், தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு வரம்புகள், அரசியல் மற்றும் ஒழுங்குமுறை தடைகள் மற்றும் சமூக-கலாச்சாரக் கட்டுப்பாடுகளை அடையாளம் காண்பது தொடர்பிலும் அவர் உரையாற்றினார். இந்த சவால்களை சமாளிப்பது பிராந்தியத்தில் நிலையான மற்றும் பாதுகாப்பான எரிசக்தி தீர்வுகளை முன்னேற்றுவதற்கு மிக முக்கியமானது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

பங்காளதேஷ் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் துணைத் தலைவர் பெர்ன்ட் ஸ்பானியரம் இம்மாநாட்டில் உரையாற்றினார். நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர் பாதுகாப்புப் படை அங்கத்தவர்களின் சிறந்த பங்களிப்பை எடுத்துரைத்தார். காலநிலை தொடர்பான அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதில் சிவில் சமூகம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையம் அவர் வலியுறுத்தினார்.

மாநாட்டில் முக்கிய பேச்சாளர்களாக பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி பல்கலைக்கழகத்தின் (BSMRAAU) முன்னாள் தூதரும் புகழ்பெற்ற நிபுணருமான எயார் வைஸ் மார்ஷல் மஹ்மூத் ஹுசைன் (ஓய்வு), இஸ்லாமாபாத்தில் உள்ள காயித்-இ-அசாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநர் சல்மா மாலிக், பூட்டானின் PhD ஆராய்ச்சி அறிஞர் லோப்சாங் டோர்ஜி, DCAF-ஜெனீவா பாதுகாப்புத் துறை ஆளுமை மையத்தின் PhD ஆராய்ச்சி அறிஞர் பாரத் பூஷன், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆசிரியர் பாரத் பூஷன், பங்களாதேஷ் தொழில்முறை பல்கலைக்கழகத்தின் (BUP) சர்வதேச உறவுகள் துறையின் உதவிப் பேராசிரியர் இஃபாத் அஞ்சும் மற்றும் நேபாள இராணுவத்தின் மூலோபாய ஆய்வாளர் மேஜர் ஜெனரல் பினாஜ் பஸ்னியாத் (ஓய்வு) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தனது தொடக்க மற்றும் இறுதி உரைகளில், BIPSS இன் தலைவர் மேஜர் ஜெனரல் ANM முனிருஸ்ஸமான் (ஓய்வு), மனித இடப்பெயர்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான அச்சுறுத்தல்கள் தொடர்பில் குறிப்பிட்டார். 2050 ஆம் ஆண்டுக்குள், பங்களாதேஷில் 20 முதல் 30 மில்லியன் மக்கள் காலநிலை தொடர்பான காரணிகளால் இடம்பெயரக்கூடும் என்று அவர் எச்சரித்தார். எனவே, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் குறைக்க, கூட்டு வழிமுறைகள், பருவநிலை மீள்தன்மை, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பில் முதலீடு செய்யுமாறு பங்குதாரர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது IDC பல்கலைக்கழகங்கள் காலநிலை மாற்ற கூட்டமைப்பின் தொழில்நுட்பத் தலைவர் மிசான் ஆர். கான், Action Aid Bangladesh இயக்குநர் ஃபரா கபீர், East West பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவிப் பேராசிரியர் பர்வேஸ் கரீம் அப்பாசி மற்றும் BIPSS சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் ஷஃப்கத் முனீர் உள்ளிட்ட பல நிபுணர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.