இலங்கை விமானப்படையின் புதிய பிரதம அதிகாரி நியமனம்

மார்ச் 04, 2025

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், முப்படைகளின் பிரதான தளபதியுமான அதிமேதகு அனுர குமார திசாநாயக்க அவர்கள், இலங்கை விமானப்படையின் பிரதம அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் L H சுமனவீரவை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, இன்று (மார்ச் 04, 2025) எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீரவிடம் அவரின் நியமனக் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.