வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் லாஹுகல நீலகிரி ரஜமஹா விகாரையில் சர்வக்ஞ தாதுக்களை ஸ்தாபிக்கும் நிகழ்வில் பங்குபற்றும்
பக்தர்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கினர்
மார்ச் 06, 2025
சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை ஹெடஓயா பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக லாஹுகல நீலகிரி ரஜமஹா விகாரையில் சர்வக்ஞ தாதுக்களை ஸ்தாபிக்கும் புனித மகோற்சவத்திற்காக வருகைத்தரும் பத்தர்களின் பாதுகாப்பிற்காக கடற்படை 2025 மார்ச் 04 ஆம் திகதி, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தேவையான நிவாரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி அம்பாறை ஹெடஓயா பெருக்கெடுத்ததால் லாஹுகல நீலகிரி ரஜமஹா விகாரையின் நுழைவுப் பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அதனால் அந்த விகாரையில் இடம்பெறும் சர்வக்ஞ தாதுக்களை ஸ்தாபிக்கும் புனித மகோற்சவத்திற்காக வருகைத்தரும் பத்தர்களுக்கு பாதுகாப்புடன் அந்த புனித நிகழ்வில் பங்கேற்பதற்காக இவ்வாறு கடற்படையின் அனர்த்த நிவாரண குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், கடற்படை நிவாரணக் குழுவினர் ஏனைய நிவாரணக் குழுக்கள் மற்றும் தரப்பினருடன் இணைந்து பக்தர்களுக்காக வழிபடுவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட தேவையான நிவாரணங்களை வெற்றிகரமாக வழங்கினர்.
நன்றி - www.navy.lk