பாக்கிஸ்தான் கடற்படை கப்பல் PNS அஸ்லட் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

மார்ச் 06, 2025

நல்லெண்ண விஜயமொன்றை மேட்கொண்டு பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) அஸ்லட் புதன்கிழமை (மார்ச் 5) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு இணங்க, இலங்கை கடற்படை வருகை தந்த கப்பலுக்கு வரவேற்பு அளித்ததாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்லட் ஒரு 123 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பலாகும். இதன் கட்டளை அதிகாரியாக கெப்டன் முஹம்மத் அசார் அக்ரம் பணியாற்றுகிறார்.  தமது விஜயத்தின் போது, கப்பலின் குழுவினர் இங்குள்ள பல  சுற்றுலா தலங்களுக்கு விஜயம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கப்பல் அதன் விஜயத்தை நிறைவு செய்து இன்று (மார்ச் 6) இலங்கையை விட்டு வெளியேரவுள்ளது.