அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

மார்ச் 06, 2025

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் கொட்டுவேகொட இன்று (மார்ச் 06) பாதுகாப்பு அமைச்சில்  பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடமிருந்து (ஓய்வு)  தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.