பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவினால் ‘பெண்கள் சமூக மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை’ குறித்து செயலமர்வு நடத்தப்பட்டது
மார்ச் 07, 2025பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் (SVU) தலைவி வைத்தியர் (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் அறிவுறுத்தலுக்கமைய சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 7) அமைச்சின் கேட்போர்கூடத்தில் ‘பெண்கள் சமூக மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை’ குறித்து செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் விங் கமாண்டர் டி.கே. தமயந்தி (ஓய்வு) சொற்பொழிவாற்றினார். அவர் சமூக மற்றும் உணர்ச்சி நுண்ணறிவை வளர்ப்பது குறித்த அறிவுசார்ந்த விடயங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் முப்படைகளைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பெண் சிவில் ஊழியர்களும் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியுடன் இணைந்து, தரம் 5 புலமைப்பரீட்சையில் விசேட திறமை காட்டிய அமைச்சின் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளான சவிந்தியா சேதசி மற்றும் ஷெனுதி ஷெவென்யா ஆகியோருக்கு விசேட புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள், கௌரவ விருந்தினர்களாக பிரைம் லேண்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் இணை நிறுவனர் மற்றும் இணைத் தலைவர் திருமதி ரீனா நோயல் மற்றும் திருமதி சந்தமினி பெரேரா ஆகியோரின் அனுசரணையில் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கராத்தே விளையாட்டில் தேசிய ரீதியில் திறமையை காட்டிய 10 ஆம் தரம் மாணவி திசேனி திசாநாயக்கவுக்கு சிறப்பு உதவித்தொகையம் வழங்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு) திருமதி இந்திகா விஜேகுணவர்தனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.