பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரக்னா அராக்க்ஷக
லங்கா லிமிடெட் நிறுவனத்திற்கு விஜயம்

மார்ச் 09, 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), வியாழக்கிழமை (மார்ச் 6) ரக்னா அராக்க்ஷக லங்கா லிமிடெட் (RALL) நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். அரசாங்கத்திற்குச் சொந்தமான பாதுகாப்பு சேவை நிறுவனமான RALL, பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படுகிறது.

வருகை தந்த, பிரதி அமைச்சரை RALL இன் தலைவர் பிரிகேடியர் ஜூட் பெர்னாண்டோ (ஓய்வு) வரவேற்றார். இந்த விஜயத்தின் போது, ​​மேஜர் ஜெனரல் ஜயசேகர நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் நிர்வாக கட்டமைப்பைப் பற்றி அறிந்துக்கொண்டார். அத்துடன் .அங்கு பணியாற்றும் சிவில் ஊழியர்கள் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுடனும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

பிரிகேடியர் பெர்னாண்டோவின் (ஓய்வு) அறிமுக உரையைத் தொடர்ந்து, பிரதி அமைச்சர் RALL இன் நிர்வாகக் குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேட்கொண்டார். இதன் போது முக்கிய செயல்பாட்டு விடயங்கள் மற்றும் மூலோபாய முயற்சிகள் குறித்த கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு) திருமதி இந்திகா விஜேகுணவர்தனவும் இதன் போது சமூகமளித்திருந்தார்.