பாதுகாப்பு பிரதி அமைச்சர் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம்

மார்ச் 09, 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) வெள்ளிக்கிழமை (மார்ச் 7) கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு (NDC) விஜயம் செய்தார்.

பிரதி அமைச்சரை NDC இன் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க வரவேற்றத்துடன் அவருடன் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.

இதன் போது NDC இன் செயல்பாடுகள் குறித்து மேஜர் ஜெனரல் முனசிங்க பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்தார். பின்னர் கல்லூரியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த மாணவ அதிகாரிகளுக்கான விரிவுரை ஒன்றை பிரதி அமைச்சர் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிந்துக்கொள்ள பிரதி அமைச்சர் NDC வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டார். விஜயத்தை நிறைவு செய்ய முன் கல்லூரியின் விசேட அதிதிகள் புத்தகத்தில் குறிப்புகளை பதிவிட்ட பிரதி அமைச்சர் கலோரியின் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் புகைப்படம் ஒன்றுக்கும் சமூகமளித்தார்.

இந்நிகழ்வினை குறிக்கும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.