பாதுகாப்பு பிரதி அமைச்சர் DSCSCன் 'Diner's Club' நிகழ்ச்சியில் விசேட விரிவுரையாற்றினார்
மார்ச் 14, 2025மாக்கொளை பாதுகாப்புப் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் (DSCSC) 'Diner's Club' நிகழ்ச்சியில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று மாலை (மார் 12) விசேட விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார்.
பாதுகாப்புப் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) பாடநெறி எண். 19 இன் 1ஆம் தவணைக்கான முதல் 'Diner's Club' நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இலங்கைக்கான மூலோபாய சவால்கள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தேசிய பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துடன் தொடர்புடைய முக்கியமான விடயங்கள் தொடர்பில் பல அறிவுபூர்வமான கருத்துக்களை முன்வைத்து சிறந்த ஒரு விரிவுரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சி நேற்று மாலை (மார்ச் 12) DSCSCயின் அலுவலர் மெஸ்ஸில் நடைபெற்றது. DSCSC பாட விதானத்தில் 'Diner's Club' நிகழ்ச்சி ஒரு முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் கொள்கையான ‘சுத்தமான இலங்கை’யின் மைய நோக்கத்துக்கு இணங்க, தேசத்தில் அமைதி மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதற்கு சிந்தனை மாற்றத்தின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
உயர்தர தொழில்முறை இராணுவக் கல்வியை வழங்குவதில் DSCSC இன் அர்ப்பணிப்பு மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களிடையே மூலோபாய தலைப்புக்கள் தொடர்பில் கருத்து பரிமாற்றத்தினை ஊக்குவிப்பதில் அதன் அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் நிறைவில் DSCSC இன் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் HHKSS ஹேவகே பிரதியமைச்சருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் பிரதி கட்டளை தளபதி உட்பட DSCSC அதிகாரிகள், கல்வி மற்றும் நிர்வாக ஊழியர்கள் மற்றும் மாணவர் அதிகாரிகளின் துணைவியார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.