கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையின்
பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்தது

மார்ச் 19, 2025

கடற்படையினரின் பங்களிப்புடன் கச்சத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா 2025 மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் பெருமளவான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர் கௌரவ லூர்து ஆனந்தன் அவர்கள் (Rt. Revd. Dr. Lourdu Ananthan. Bishop of Sivagangai diocese, India) யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் கௌரவ பீ.ஜே. ஜெபரத்னம் அவர்கள் (Very Revd. Fr. P. J. Jebaratnam, Vicar General, Jaffna Diocese) இந்தியாவின் ராமேஸ்வரத்தில் உள்ள பாரிஷ் கௌரவ ஆயர் அசோக் அவர்கள் (Revd. Fr. Ashok, Parish Priest, Rameswaram, India) மற்றும் நெடுந்தீவு திருச்சபை ஆயர் அருட்தந்தை பி.பத்திநாதன் அவர்கள் (Revd. Fr. P. Pathinathan. Parish Priest, Delft) ஆகியோரின் வழிகாட்டலில், யாழ் ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் பர்நாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு. மருதலிங்கம் பிறதீபனின் (Maruthalingam Piiratheepan) ஆகியோரின் ஏற்பாட்டிலும், இலங்கை கடற்படையின் முழுமையான உழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வள பங்களிப்புடன், வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த பெருவிழாவின் இறுதி பூஜையில் கௌரவ மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் திரு.ராமலிங்கம் சந்திரசேகர், கடற்படைத் தளபதி ,கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி வடக்கு கடற்படை கட்டளை தளபதி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகர் உட்பட முக்கியஸ்தர்கள் குழுவினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டதுடன், நன்றியுரை ஆற்றிய யாழ் மறைமாவட் கௌரவ பி. ஜே. ஜெபரத்தினம் ஆண்டகை அவர்கள், “பாரம்பரியமாக கிடைத்த கடல் வளமும் உயிரியல் பல்வகைமையும் ஒரு நியாயமான மற்றும் மரியாதைக்குரிய சந்ததியினராக எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று கடற்படைத் தளபதி கூரிய செய்தியை எண்ணாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட (8500) இந்திய மற்றும் இலங்கை பக்தர்களிடம் கூறினார்.

அதன்படி, கடற்படைத் தளபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில்,வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படை, இந்த விழாவை மிகுந்த விமர்சையாக கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அந்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துடன் ஒருங்கிணைந்து, பக்தர்களுக்கு குடிநீர், உணவு, சுகாதார வசதிகள், தற்காலிக குடிசைகள், தற்காலிக சாலைகள் மற்றும் தற்காலிக இறங்கு துறைகள், மின்சார வசதிகள், பக்தர்களின் பாதுகாப்பிற்காக உயிர்காக்கும் குழுக்கள், மருத்துவ வசதிகள் மற்றும் தொடர்பாடல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவின் நிறைவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கடற்படை தளபதி, இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து பிராந்தியங்களை சேர்ந்த பக்தர்களும் பங்கேற்கும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவினை இலங்கை அரசு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரில் இலங்கை கடற்படை, யாழ் மறைமாவட்டம், வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர், அரச நிறுவனங்கள், பொலிசார் ஆகியோர் இணைந்த்தால் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த முடிந்ததாக கூறினார்.

மேலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரில், கடலோர காவல்படை, இராணுவம், விமானப்படை, பொலிஸ் போன்ற சட்ட அமலாக்க முகவர்களுடன் கடற்படையினர் இணைந்து செயற்படுகின்றனர். நாட்டின் சட்டத்தை மீறும் வகையில் ஆட்கடத்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை, இந்தியா, மாலத்தீவு மற்றும் பிற கடல்சார் நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் தெளிவாக நிறுவப்பட்டுள்ளன என்றும், இதற்கான சட்ட கட்டமைப்பும் மிகவும் தெளிவாக உள்ளது என்றும், அனைத்து இராச்சியங்களும் இது தொடர்பாக தெளிவான புரிதலுடன் செயல்பட்டு வருவதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்தார். எந்தவொரு தரப்பினரும் கடல் எல்லைகளை மீறினால், ஒவ்வொரு நாடும் சட்டத்தை அமல்படுத்தும் என்றும், அதன்படி, சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆதரவளிக்க கடற்படை உறுதிபூண்டுள்ளது என்றும் கூறினார்.இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க இலங்கை கடற்படை தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இலங்கை பிராந்திய நீர்நிலைகளில் பயணிக்கும் அனைத்து கப்பல்களும் தொடர்புடைய நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டு சரியான கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்படுவதாகவும், அவை பிராந்திய நீர்நிலைக்குள் நுழைந்த தருணத்திலிருந்து இரவும் பகலும் கண்காணிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு மேலும் பதிலளித்த கடற்படைத் தளபதி, இலங்கை கடல் எல்லைகளில் கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் இல்லாத ஒரு வலயம் என்றும், இலங்கை கடல் பகுதியில் எந்த மீனவர்களும் தாக்கப்படவில்லை என்றும் கூறினார். கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிற பிராந்திய நாடுகளுக்கும் இடையே மிகச் சிறந்த உறவு இருப்பதாக அவர் கூறினார். இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும், இந்திய மற்றும் இலங்கை கடலோர காவல்படைத் துறைகளுக்கும் இடையே இதே போன்ற உறவுகள் உள்ளன. நாட்டின் முப்படைகளின் திறன் மேம்பாட்டிற்கு பிராந்திய நாடுகள் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க கடற்படைத் தளபதி, கடலோர காவல்படைத் துறை மற்றும் விமானப்படை தொடர்ந்து எல்லை ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறினார்.

நமக்கு பரிசாகப் பெற்ற இந்த வளங்களையும் உயிரியல் பல்வகைமையை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவது ஒரு தவிர்க்க முடியாத பொறுப்பு என்பதையும், ஒவ்வொரு தனிநபரும் சர்வதேச சட்டம் மற்றும் நாடுகளின் சட்டங்களை மதிப்பது மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானது என்பதையும் நினைவு கூர்ந்த கடற்படைத் தளபதி, இந்தப் பொறுப்பின் பெரும்பகுதி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்கள் மீது இருப்பதாக கூறினார். மேலும், இந்த மத நிகழ்வின் துல்லியமான செய்தி சேகரிப்பை உறுதி செய்ய வந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

மேலும், இந்த கச்சத்தீவு பெருவிழாவிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உயரதிகாரிகள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) உட்பட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தைகள், அரச அதிகாரிகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், இலங்கை கடற்படை கிறிஸ்தவ சங்க அதிகாரிகள் உட்பட முப்படையினர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், ஏராளமான இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி - www.navy.lk