ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

மார்ச் 19, 2025

இலக்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு Levan S. Dzhagaryan, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) சந்தித்தார்.

பிரதி அமைச்சர் ரஷ்ய தூதரை அன்புடன் வரவேறார். இதன் போது இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்து தொடர்பில் ஒரு சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கையின் யுத்த காலத்தில் ரஷ்யா அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதி அமைச்சர், இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்கும் மனிதாபிமான உதவிக்கும் அவர் நன்றி தெரிவித்தார் .

பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தினர்.

இலங்கையுடனான பாரம்பரிய நட்பு உறவுகளைப் பேணுவதில் ரஷ்யாவின் உறுதிப்பாட்டை ரஷ்ய தூதர் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை என்ற  ரஷ்யாவின் கொள்கையை வலியுறுத்தினார்.

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Sergey Belyankin, பயிற்சிகல்  தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடனான வலுவான இராணுவ உறவை எடுத்துரைத்தத்துடன், வெளிநாட்டு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான விருப்பத்தையும் தெரிவித்தார். அத்துடன்  பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் ஒப்புதலுடன், ரஷ்ய இராணுவ கேடட் கடற்படை பள்ளிகளில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளம் இலங்கையர்களுக்கு கல்வி வாய்ப்புகளை அழிப்பது தொடர்பிலும் அவர் முன்மொழிந்தார்.

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் திருமதி Galina Kuklinaவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.