அக்குரேகொட, பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதிக்கு பாதுகாப்புச் செயலாளர் கண்காணிப்பு விஜயம்

ஜனவரி 02, 2021

அக்குரேகொடவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதியின் தற்போததைய நிலைமைகள் குறித்து ஆராய  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று காலை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது நிர்மாணிக்கப்பட்டு வரும் அனைத்து துறைகளின் பணிகளை செயற்றிட்டத்தை முன்னெடுத்து வரும் திட்ட அதிகாரிகளுடன் இணைந்து ஜெனரல் குணரத்ன பார்வையிட்டார்.

மேலும், இந்த திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்துகொண்ட பாதுகாப்பு செயலாளர், பணிகளை விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்குமாறு செயற்திட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த விஜயத்தின் போது இந்த திட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக பாதகாப்பு செயலாளருக்கு விரிவாக விளக்கமளிக்கப்படதுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.