இந்து சமுத்திரத்தில் பிரான்ஸ் கூட்டுப் படை தளபதி
பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
மார்ச் 20, 2025
இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரான்ஸ் படைகளின் கூட்டுப் படை தளபதி ரியர் அட்மிரல் Hugues Laine , புதன்கிழமை (மார்ச் 19) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
பிரான்ஸ் தூதுக்குழுவில் இலங்கைக்கான பிரான்ஸ் துணைத் தூதுவர் திருமதி Marie-Noelle Duris, புதுதில்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் கமாண்டர் Dang Khoa Bui மற்றும் தற்சமயம் இலங்கைக்கு விஜயம் மேட்கொண்டுள்ள பிரான்ஸ் கடற்படைக் கப்பலான Provence ஸின் தளபதி கெப்டன் Lionel Siegfried ஆகியோறும் அடங்குவர். பாதுகாப்பு அமைச்சிற்கு வருகை தந்த பிரான்ஸ் குழுவினரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றார்.
இச் சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. பொதுவான பாதுகாப்பு சவால்களை நிவர்த்தி செய்வதற்கான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்புச் செயலாளரும் ரியர் அட்மிரல் Laine வும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மைக்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டு தெரிவித்ததுடன், பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இலங்கையின் புவியியல் இருப்பிடத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், கடல்சார் கள விழிப்புணர்வு, மனிதாபிமான உதவி மற்றும் கடல்சார் அனர்த்த மீட்பு போன்ற துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தை ரியர் அட்மிரல் Laine வலியுறுத்தினார்.
இச் சந்திப்பின் போது, பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலுக்கு பிரான்ஸ் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர். அத்துடன் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் இக் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டார்.