அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை
பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்
மார்ச் 20, 2025
அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (USINDOPACOM) அட்மிரல் Samuel Paparo, இன்று (மார்ச் 20) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
பாதுகாப்புச் செயலாளர், அட்மிரல் Paparo தலைமையிலான அமெரிக்கக் தூதுக்குழுவை அன்புடன் வரவேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் Anthony Nelson னும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துக்கொன்டார்.
இச் சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். கூட்டு முயற்சிகள் மற்றும் பரஸ்பர புரிதல் மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மைக்கு எயார் வைஸ் மார்ஷல் தூயகொந்தா (ஓய்வு) தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அட்மிரல் Paparo மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இலங்கையின் பூகோல மூலோபாய முக்கியத்துவத்தையம் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்தவும் கூட்டாண்மைக்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். இந்த சந்திப்பை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் இக் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.