NCC இன் புதிய பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

மார்ச் 24, 2025

தேசிய மாணவர் படையணியின் (NCC) புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் பிரிகேடியர் ரஜித்த பிரேமதிலக்க, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (மார்ச் 24) சந்தித்தார்.

இதன் போது NCC இன் 15 வது பணிப்பாளராக நியமனம் பெற்ற பிரிகேடியர் பிரேமதிலக்க, பாதுகாப்பு செயலாளரிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

NCC யின் பணிப்பாளராக பதவியேற்பதற்கு முன் பிரிகேடியர் பிரேமதிலக்க கவசப் படையணியின் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.