பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தான்
தேசிய தினத்தைக் கொண்டாடியது

மார்ச் 25, 2025

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் திங்கட்கிழமை (மார்ச் 24) கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாகிஸ்தானின் தேசிய தினத்தை  கொண்டாடியது.

இந்த நிகழ்வில் தொழில்  அமைச்சர் கௌரவ அனில் ஜயந்த பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பாதுகாப்பு பிரதி  அமைச்சர் மேஜர் ஜெனரல்  அருண ஜயசேகர (ஓய்வு), பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா  (ஓய்வு) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம்-உல்-அஸீஸ் (ஓய்வு) வருகை தந்த விருந்தினர்களை அன்புடன் வரவேற்றதுடன் தனது உரையில், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகளைப் நினைவு கூர்ந்தார்.  அத்துடன் இரு நாடுகளின் பரஸ்பர வரலாற்று மற்றும் இராஜதந்திர உறவுகளையும்  வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சபாநாயகர், பிரதி சபாநாயகர்,  அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள். இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும்  சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்துக்  கொண்டனர்.