உலக வானிலை ஆராய்ச்சி தினம் - 2025 பாதுகாப்பு பிரதி
அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது
மார்ச் 25, 2025
- உலக வானிலை ஆராய்ச்சி தினம் வருடாந்தம் மார்ச் 23 அன்று கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு உலக வானிலை அமைப்பின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
"Closing the Early Warning Gap, Together" என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் இந்த ஆண்டு உலக வானிலை ஆராய்ச்சி தினம், இன்று (மார்ச் 25) கொழும்பில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு 1950 மார்ச் 23 அன்று நிறுவப்பட்டது, இந்த நாளில் ஆண்டுதோறும் உலக வானிலை ஆராய்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாள் மனிதகுலம் மற்றும் சுற்றுச்சூழலின் நல்வாழ்வுக்கு வானிலை அறிவியலின் அத்தியாவசிய பங்களிப்பைக் கொண்டாடுகிறது, மேலும் வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு அனர்த்தங்கள் குறித்து மக்களுக்கு அறிவூட்டவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். வானிலை ஆராய்ச்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே. கருணாநாயக்க நிகழ்விற்கு வருகைதந்த பிரமுகர்களை வரவேற்றார்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர், இத்துறையில் பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு. சமூகங்களைப் பாதுகாக்க, வலுவான மற்றும் சமூக ரீதியாக பாதுகாப்பான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதன் மூலம் சமூகங்களின் நலனை உறுதிப்படுத்த உதவும் என்று குறிப்பிட்டார். இலங்கையில் இந்தப் பணியில் முன்னணியில் இருக்கும் வானிலை ஆராய்ச்சி திணைக்களம், வானிலை மற்றும் காலநிலை தொடர்பான சேவைகளை நடைமுறை ரீதியாகவும் திறமையான முறையிலும் பயன்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்க 7 தசாப்தங்களுக்கும் மேலாக உலக வானிலை அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, மேலதிக செயலாளர் -அனர்த்த முகாமைத்துவம் கே.ஜி. தர்மதிலக்க, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு), தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன, நீர்ப்பாசனத் துறையின் பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர, அனர்த்த முகாமைத்துவ பிரிவின்பணிப்பாளர் நாயகம் மற்றும் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தலைமை நிதி அதிகாரி, முன்னாள் பணிப்பாளர்கள் நாயகம், வானிலை அரைச்சி திணைக்களத்தின் பணிப்பாளர்கள் , துணை பணிப்பாளர்கள், வானிலை ஆய்வாளர்கள் மற்றும் முப்படை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.