புதிய NCC இயக்குனர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

மார்ச் 28, 2025

தேசிய மாணவர் படையின் (NCC) புதிய இயக்குனர் பிரிகேடியர் ரஜித பிரேமதிலக்க, வியாழக்கிழமை (மார்ச் 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​NCC-க்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக பிரதி அமைச்சருக்கு பிரிகேடியர் பிரேமதிலக்க நன்றி தெரிவித்தார். மேலும், தற்போதைய பயிற்சித் திட்டங்கள், மாணவர்களிடையே தலைமைத்துவ வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கு NCC-யின் பங்களிப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பிரதி அமைச்சருக்கு விளக்கினார்.

இளைஞர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தேசபக்தியை வளர்ப்பதில் NCC-யின் முயற்சிகளை மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) பாராட்டினார். அதன் நோக்கங்களை அடைவதற்கு மேலும் ஆதரவை வழங்குவதற்கான அமைச்சின் உறுதிப்பாட்டை அவர் உறுதி செய்தார்.

இந்த சந்திப்பில் பரந்த மாணவர் தளத்தை அடைய NCC நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், மேம்பட்ட பயிற்சி முறைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற தேசிய அமைப்புகளுடன் வலுவான கூட்டாண்மைகளை வளர்ப்பது குறித்தம் கலந்துரையாடினர்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் NCCயின் பங்கை மேம்படுத்துவதில் இரு தரப்பினரும் தங்கள் பரஸ்பர உறுதிப்பாட்டையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.