பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் வரவு செலவு திட்ட அமலாக்கம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது

மார்ச் 28, 2025

மார்ச் 21 அன்று பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் வரவு செலவுத் திட்ட அமலாக்கம் தொடர்பான கூட்டமொன்று புதன்கிழமை (மார்ச் 26) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம், ஜனாதிபதியின் தொலைநோக்கு பார்வை மற்றும் தேசியக் கொள்கையுடன் வரவு செலவுத் திட்டத்தை ஒன்றிணைத்து செயல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாட நடைபெற்றது.

பாதுகாப்பு துறைக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் திறம்பட மற்றும் வெளிப்படையான பயன்பாடு நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மூலோபாய ரீதியாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வது, பாதுகாப்பு, செழிப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை வலியுறுத்தும் "ஒரு செழிப்பான நாடு, ஒரு அழகான வாழ்க்கை" என்ற அரசாங்கத்தின் கொள்கையை ஆதரிப்பதாகவும் அமையும்.

கூட்டத்தின் போது, ​​பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) முப்படைகள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்தார். அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் நாயகன் -திட்டமிடல் அனுர ரணசிங்க, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் எதிர்பார்க்கப்படும் தாக்கம் பற்றிய விரிவான கண்ணோட்டத்தினை வழங்கினார்.

கலந்துரையாடலின் முடிவில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மூலோபாய முதலீட்டின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான உருவாக்க பாதுகாப்பு செலவினங்களை முறையாக நிர்வகிப்பதன் அவசியத்தையும் என்று அவர் வலியுறுத்தினார்.

இக் கூட்டத்ற்கு இராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகள், கடற்படைத் பிரதம அதிகாரி, மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) மற்றும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.