நல்லெண்ணப் விஜயம் மேட்கொண்டு ஜப்பான் JMSDF கப்பல்கள் கொழும்பு வருகை
ஏப்ரல் 02, 2025நல்லெண்ண விஜயமொன்றை மேட்கொண்டு ஜப்பானிய கடற் படை (JMSDF) கப்பல்களான Bungo மற்றும் Etajima செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) இலங்கையை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்தாய் வந்தடைந்த இக்கப்பல்களுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய இலங்கை கடற்படையினால் வரவேற்பலிக்கப்பட்டதாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
141 மீட்டர் நீளமுள்ள Uraga-வகுப்பு கண்ணிவெடி அகற்றும் கப்பலான Bungo, கமாண்டர் Tanaka Kojiயின் தலைமையிலும், 65 மீட்டர் நீளமுள்ள மற்றுமொரு கண்ணிவெடி அகற்றும் கப்பலான Etajima, கமாண்டர் Oda Takayuki தலைமையில் கீழ் இயங்குகின்றன.
இவ்விஜயத்தின் போது கப்பலின் குழுவினர் கொழும்பில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ளார்கள். ஏப்ரல் 4 ஆம் திகதி இக்கப்பல்கள் இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளன