இலங்கை கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை ஆகியவை கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு பங்களிக்கின்றன

ஏப்ரல் 04, 2025

அதன்படி, 2025 ஏப்ரல் 03, அன்று, ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் கடற்படையினர், கொழும்பு காலி முகத்துவாரத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையை சுத்தம் செய்வதற்காக கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தீவைச் சூழவுள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்துடன் இணைந்து 2025 ஏப்ரல் 03 ஆம் திகதி கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு , உத்தியோகபூர்வ விஜயமாக தீவுக்கு வருகை தந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல்களான BUNGO (MST-464)மற்றும் ETAJIMA (MSO-306) ஆகிய கப்பல்களின் குழுவினர் பங்களித்தனர்.

நன்றி - www.navy.lk