அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கையின் பிரதி பாதுகாப்பு
அமைச்சரைச் சந்தித்தார்

ஏப்ரல் 09, 2025

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய போல் ஸ்டீபன்ஸ், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அமண்டா ஜோன்ஸ்டனும் கலந்துகொண்டதுன், இந்த சந்திப்பு ஒரு நல்லெண்ண மற்றும் ஆக்கபூர்வமான விதத்தில் நடைபெற்றது, இது அவுதிரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

இந்தக் கலந்துரையாடலின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய விடயங்கள் குறித்து, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் துறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் அவுஸ்திரேலியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா சமீபத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களை உதாரணத்தை எடுத்துரைத்த மேஜர் ஜெனரல் ஜயசேகர, இலங்கை கடற்படை ஹைட்ரோகிராஃபிக் சேவைக்கு (SLNHS) ஒரு அதிநவீன ஆழமற்ற நீர் மல்டி-பீம் எக்கோ சவுண்டரை நன்கொடையாக வழங்கியதன் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கம் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை பாராட்டினார்.

இந்த நவீன மேம்பட்ட உபகரணங்கள் துறைமுகங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் மூலோபாய நீர்வழிகளை ஆய்வு செய்வதற்கான இலங்கையின் திறனில் ஒரு மாற்றத்தக்க மேம்பாட்டைக் கொண்டு வந்துள்ளதாகவும், இதன் மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய கடல்சார் நிலையானத்தன்மைக்கு பங்களிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடல்சார் கள விழிப்புணர்வு (MDA), பயிற்சி பரிமாற்றங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் போன்ற துறைகளில் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கும் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் இந்த சந்திப்பின் போது உறுதிப்படுத்தினர்.