பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுக்கு 'Clean Sri Lanka' திட்டம் குறித்து
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
ஏப்ரல் 09, 2025
பாதுகாப்பு அமைச்சின் கீழ் (MoD) உள்ள நிறுவனங்களின் நிர்வாக மட்டம் அல்லாத பணியாளர்களுக்கு 'Clean Sri Lanka' திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைச் பெற்றுக்கொள்ள நோக்கமாகக் கொண்ட தொடர் நிகழ்ச்சிகளின் முதல் கட்டம் இன்று (ஏப்ரல் 8) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களில் நிர்வாக மட்டம் அல்லாத பணியாளர்களை இலக்காகக் கொண்டு பல கட்டங்களாக நிகழ்த்தப்படவுள்ளது. ஆரம்ப அமர்வைத் தொடர்ந்து, ஏப்ரல் 24, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் மேலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நிர்வாகம், சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் 'Clean Sri Lanka' திட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய 'Clean Sri Lanka' திட்டத்தின் நோக்கங்களை முன்னெடுப்பதில் பணியாளர்களின் பங்கேற்பின் முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சி வலியுறுத்துவதுடன் இதன்போது எதிர்கால நடவடிக்கைகளுக்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்க பங்கேற்பாளர்களை ஊக்குவித்தது.
தேசிய பாதுகாப்பில் அதன் முக்கிய பங்கை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தூய்மையான மற்றும் வளமான இலங்கை என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு பாதுகாப்பு அமைச்சு தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்துகிறது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர் கலந்து கொண்டனர்.