இராணுவத்தினரால் மேலும் மரக்கன்றுகள் நடுகை
ஜனவரி 04, 2021இராணுவத்தினரால் அண்மையில் இரணைமடு நீர்த்தேக்கத்தின் கரையோரங்களைச் சுற்றி அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுகை செய்யப்பட்டது. கிளிநொச்சியில் 7,500 அரிய வகை மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டத்திற்கமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட அக்சஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இராணுவ பீரங்கி படைப்பிரிவின் 8வது ரெஜிமென்ட் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள அனைத்து இராணுவ ஸ்தாபனங்களுக்கும் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட அக்சஸ் இன்ஜினியரிங் நிறுவன உறுப்பினர்கள், நீர்ப்பாசனம் மற்றும் வனவள திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் அநுராதபுரம் குடாவல்பொல குளம், பூனேவ குளம், கல்கடவல குளம், தம்மனனலவாக்க குளம் ஆகிய நீரேந்து பிரதேசங்களை சுற்றி ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்த திட்டம், மீள காடுகளை உருவாக்கும் இராணுவ தளபதியின் 'துரு மிதுரு நவ ரடக்' எனும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிராந்திய அரச அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.