தேடுதல் நடவடிக்கையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
மே 02, 2019உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ஒருங்கிணைந்த தேடல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதற்கேற்ப கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியோருடன் இணைந்து தேடல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர், சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதுடன் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றையும் மீட்டுள்ளனர். குறித்த தேடல் நடவடிக்கைகள் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள சேருநுவர, சம்மாந்துறை, ஏறாவூர், கல்முனை ஆகிய பிரதேசங்களிலும் கேகாலையின் கொட்டியாகும்புற பிரதேசத்திலும் நேற்று நண்பகல் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்மாந்துறை நகரப் புற பகுதியில் இடம்பெற்ற சுற்றிவலைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது 200 ஜெலிக்னைட் குச்சிகள், சேவை நூல்கள், 200 டெடொனேட்டர்கள், 2 கைதுப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், ஒரு டி -56 ரக துப்பாக்கி மகசின் மற்றும் 170 ரவைகள், அமோனியா பைக்கற்றுகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது ஆறு டி -56 ரக துப்பாக்கி மகசின்கள், 362 டி -56 ரக துப்பாக்கி ரவைகள், இயந்திர துப்பாக்கி ரவை ஒன்று, இரண்டு பயன்படுத்த முடியாத கைக்குண்டுகள் , இரண்டு கத்திகள், பயன்படுத்த முடியாத வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டன. வான் எல மற்றும் சேருவில பகுதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது இரண்டு இலகு ரக துப்பாக்கிகள், ஐந்து வாள்கள், சந்தேககத்திற்கிடமான மூன்று மோட்டார் சைக்கில்கள்,உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மற்றும் சேருவில பௌத்த விகாரையின் புராதன வரைபடம் ஆகியன கைப்பற்றப்பட்டன. 11 பெட்ரோல் குண்டுகள், 2 வாக்கி-டோக்கிகள், 16 கடவுச்சீட்டுக்கள், 9 கத்திகள், 12 கையடக்க தொலைபேசிகள், 4 வைஃபை ரௌட்டர்கள், 2 கை கைக்குண்டுகள், 8 கைகுண்டுகள், 3 வாள், 1 நன்சக்கு, 1 தொலைநோக்கி, 1 ஜிபிஎஸ் கருவி மற்றும் 1 இராணுவ சீருடை என்பன கொட்டியாகும்புற பிரதேசத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டன. பல சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இறக்கக்கண்டி நகரம் மற்றும் கரையோரங்களில் கடந்த 27ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். 16 நீர் ஜெல் குச்சிகள், 160 மின் அல்லாத டெடொனேட்டர்கள், 60 பாதுகாப்பு ஃப்யூஸ்கள் (ஒவ்வொன்றும் 12.5 அடி நீளம்) மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை இறக்கக்கண்டி நகர பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, 48 நீர் ஜெல் குச்சிகள், 55 மின் அல்லாத டெடொனேட்டர்கள், 34 பாதுகாப்பு ஃப்யூஸ்கள் (ஒவ்வொன்றும் 14.5 அடி நீளம்) ஆகியன இறக்கக்கண்டி கரையோரங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டன. ஜின்னாபுரம் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் ஒரு நீர் ஜெல் குச்சிகள், 5 மின் அல்லாத டெடொனேட்டர்கள், ஒரு பாதுகாப்பு ஃப்யூஸ் ஆகியவற்றை மீட்டனர். இரு சந்தேக நபர்கள் 5 மின் அல்லாத டெடொனேட்டர்கள் மற்றும் 53மீட்டர் நீளமான பாதுகாப்பு ஃப்யூஸ் ஆகியவற்றுடன் பொத்துவில் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கீரியங்கல்லி முள்ளச்சி குளம் பகுதியில் விமானப்படை வீரர்களினால் மேற்கொள்ளபட்ட டுதல் நடவடிக்கைகளின் போது 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான தீவிரவாதம் தொடர்பான ஏடுகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஒரு கணணி என்பன கைப்பற்றப்பட்டன. மேலும் கணுவான பிரதேசத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார.