மற்றுமொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் அம்பலாந்தோட்டையில் ஸ்தாபிப்பு
ஜனவரி 05, 2021இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக அம்பலாந்தோட்டை சியம்பலாகோட்டையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த பகுதியில் சுத்தமான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நன்மையடையவுள்ளனர்.
சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான கௌரவ. சமல் ராஜபக்ஷ வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கமைய முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு , கடற்படையின் தொழில்நுட்ப திறன் , மனிதவளத்தினை வழங்குகின்றது. இந்த திட்டத்திற்கான நிதியுதவி சமூக பொறுப்பு திறுவனங்கள் மூலம் திரட்டப்படுகின்றது. இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீர் இன்மையினால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு குறைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு, சுகாதார வழி முறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் தென்பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி,சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கடற்படை வீரர்கள் மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.