--> -->

கிளிநொச்சியில் கல்வி மேம்பாட்டுக்கு இராணுவத்தினர் உதவிக்கரம்

ஜனவரி 06, 2021

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் அப்பகுதியில் வசிக்கும் 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் வாசிப்பு உசாத்துணை நூல்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

அதன்படி, மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லம் மற்றும் அறிவுச்சோலை சிறுவர் இல்லம் ஆகிய சிறுவர் இல்லங்களை சேர்ந்த மாணவர்களுக்கே இவ்வாறு கற்றல் உபகரணங்கள் மற்றும் உசாத்துணை வாசிப்பு நூல்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக நன்கொடையாளர் ஒருவரினால் வழங்கப்பட்ட நிதியுதவி மூலம் தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினர் உதவி அளித்தனர்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி, இலங்கை பீரங்கிப்படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி, நன்கொடையாளர்கள், அதிதிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.