சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
ஜனவரி 07, 2021வடமேற்கு கடலில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1680 கிலோ உலர்ந்த மஞ்சள் மற்றும் 150 கிலோ ஏலக்காய் என்பவற்றுடன் நான்கு வெளிநாட்டவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
புத்தளத்தின் குதிரைமலை முனைக்கு வடக்கே சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை அவதானித்த வட-மேற்கு கடற்படைக் கட்டளையகத்தின் ஆழ்கடல் ரோந்துப் படகினால் ஜனவரி 5ம் திகதி கடத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள், அவர்களது படகு மற்றும் 62 சாக்கு பொதிகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தினணக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை சுகாதார வழி முறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.