விமானப்படையின் 'கபீர்' படைப்பிரிவு வெள்ளி விழாவை கொண்டாடுகிறது
ஜனவரி 07, 2021இலங்கை விமானப்படையின் “லயன் கப்ஸ்” என பரவலாக அறியப்பட்ட 10-வது போர் படைப்பிரிவு ஜனவரி 5ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தனது ‘வெள்ளி விழாவை’ கொண்டாடியது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கைப் போருக்கு அளித்த மகத்தான பங்களிப்பிற்காக 2009 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இந்த படைக்கு ஜனாதிபதி வண்ணங்கள் வழங்கப்பட்டன.
1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி, கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இது ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு கிபீர் மல்டிரோல் போர் விமானங்களுடன், படை அதன் செயல்பாட்டு பறப்பு காலத்தை 2,800 மணி நேரத்திற்கும் மேலாக பதிவு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவும் இந்த படைப்பிரிவின் ஸ்தாபக உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.