வில்பத்து வனப் பகுதியில் இராணுவத்தினரால் மரநடுகை
ஜனவரி 09, 2021வில்பத்து வனப் பகுதியில் மரங்களை மீள நடுகை செய்யும் திட்டத்திற்கு அமைவாக அண்மையில் ஸ்ரீநாத் நகரின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக அரிய மரக்கன்றுகள் இராணுவத்தினரால் மீள நடுகை செய்யப்பட்டது.
வன்னி பாதுகாப்புப் படை தளபதியின் பணிப்புரைக்கு அமைய வன்னி பாதுகாப்பு படையின் கீழ் பணிபுரியும் 54வது பிரிவின் படை வீரர்களின் ஒத்துழைப்புடன் இந்த சுற்றுச்சூழல் நேய திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள 306-C1 லயன்ஸ் கிளப் உறுப்பினர்களுடன் இணைந்து மேற்படி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இராணுவத்தால் தொடங்கப்பட்ட 'துரு மித்திரு நவ ரட்டக்' எனும் திட்டம் 11 கட்டங்களாக இடம்பெற்றது. இந்த திட்டத்தின் மூலம் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் 76.05 ஏக்கர் நிலத்தில் மரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.
கல்லாறு பகுதியை உள்ளடக்கியதாக 251 ஏக்கரில் மரங்களை மிள நடுகை செய்யும் திட்டத்தின் முதற்கட்டமாக தற்போதுவரை 12 ஏக்கர் பரப்பில் மரங்கள் மீள்நடுகை செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.