ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 12, 2021

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ. ஷ்கோடா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (12) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில்இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.