கடற்படைக்கான புதிய கப்பல் கொழும்பு வருகை
ஜூலை 09, 2019இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் கடந்தமாதம் 05ஆம் திகதியன்று சீன மக்கள் குடியரசினால் வழங்கப்பட்ட பி 625 கப்பல் நேற்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கப்பலினை வரவேற்கும் நிகழ்வின்போது இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர், அதிமேதகு திரு. செங் சூயுவான், கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
1994 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கப்பல் 112 மீற்றர் நீளமும் 12.4 மீற்றர் அகலமும் கொண்டதுடன், எதிர்காலத்தில் கடற்பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைக்கும், மீனவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கும் ஆழ்கடல் ரோந்து நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர் வரும் நாட்களில் இக்கப்பளுக்கான அதிகாரமளிக்கும் நிகழ்வு இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.